தமிழ்நாடு அரசின் தகவல்கள் மற்றும் இணைய சேவைகளை
வழங்கும் ஓரிட அணுகலாக செயல்படும் மாநில சேவை இணையதளமானது கடந்த 24.02.2014 அன்று மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மின் மாவட்ட சேவைகள், உள்ளடக்க மேலாண்மை அமைப்பு, இதர துறைகளின்
சேவைகளுக்கான இணைப்புகள், கைபேசி
இணக்கமுறை, பொதுமக்களின் பதிவுகள் ஆகியவற்றை மாநில சேவை இணையதளம்
உள்ளடக்கியிருக்கும்.
The State Portal was inaugurated by Hon’ble Chief
Minister on 24.02.2014 and is a one-stop gateway to Tamil Nadu Government
Information and e-Services. The State Portal provides features like integration
of e-District services, Content Management System, links to all Department
services, mobile compliance, citizen registration etc.
வணக்கம். ஆம் ஆத்மி கட்சி-தமிழ்நாடு உறுப்பினர் G.M.Shankar M.A.B.L., வழக்குரைஞர், மடிப்பாக்கம், சென்னை-600091ல் வசிக்கும் நான் மேற்படி தமிழக மாநில சேவை இணையதளத்தினை பற்றிய கருத்துக்களை முதல் நபராக அரசாங்கத்திடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ReplyDeleteஇப்படியொரு வசதி உள்ளதென்று நாட்டு மக்கள் பலபேர்களுக்கு அறியாமல் போனதால்தான் நிர்வாகம் சற்றே சுணக்கமடைந்துள்ளது என கருதுகிறேன். மேலும் இப்படியொரு கருத்துப்பகிரும் தளம் ஒன்று அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை துறைசார்ந்த நிர்வாகம் விளம்பரப்படுத்தியிருந்தால் மக்களும் இதனை பெருமளவில் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் 2014ம் வருடத்திற்குப்பிறகு 6 வருடங்கள் கழித்து இந்த இணைய முகப்புப்பகுதியில் இந்தப்பதிவுதான் முதன்முதலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றால் நிர்வாகம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நாம் வாழ்கிற மாநிலம் நன்றாக இருக்கவேண்டும், நிர்வாகம் நன்றாக இருக்கவேண்டும், யார் யாருக்கு என்னென்ன கிடைக்கவேண்டுமோ அது அரசாங்கம் மூலம் கிடைத்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தால் மட்டுமே இம்மாதிரியான சேவைகள் மக்களை சென்றடையும்.
மேலும் tn.gov.in இணையதளத்தில் கடந்த 2018ம் வருடம் முதல் இன்றைய நாளது வரை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்த தளத்தில் அவர்களின் சென்னை தொலைபேசி எண்ணோ, அவர்களின் தொகுதி சார்ந்த தொலைபேசி எண்ணோ குறிப்பிடப்படாமல் அந்த பக்கம் வெறுமையாக உள்ளது. மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரையும், அமைச்சர்களையும் ஒரு சாமானிய, படித்த, நடுத்தர மக்கள் தொலைபேசியில் அழைத்துப்பேச நினைத்தால்கூட இங்கே அதற்கான வாய்ப்பும் இல்லை. தகவலும் மேற்படி இணையதளத்தில் காணப்படவில்லை. மேலும் அவர்களின் மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்படாதது முற்றிலும் சரியல்ல. இதுகுறித்து தகவல்தொழில்நுட்பத்துறைக்கு கடிதமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகவலும் கேட்டு ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனை நிர்வாக ரீதியாக கொஞ்சம் விவாதிப்போம். ஒரு அண்டை மாநில முதல்வரோ, அமைச்சர்களோ, மத்திய அமைச்சரோ அல்லது அயல்நாட்டினைச் சார்ந்தவர்கள் இயற்கை பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இணையதளம் மூலம் தொடர்புகொள்ள முயற்சிப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் அதற்கான வசதி இங்கே உள்ளதா என்றால் இல்லை.
அப்போது அவர்கள் நம் மாநில உள்கட்டமைப்பினைபற்றிய புரிதல் எப்படியிருக்கும். இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் இணைய வலையில் பின்னிபிணைந்துள்ளது. இம்மாதிரியான காலகட்டத்தில் அதனை துண்டித்து வைத்திருப்பது சரியல்ல.
ஆகையால் தமிழக அரசு இணையதளத்தில் (tn.gov.in)உடனடியாக முதலமைச்சரின் தொலைபேசி எண், அமைச்சர்களின் தொலைபேசி எண் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரியினை வெளியிட்டு மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியினை அகற்றுங்கள்.
மகிழ்ச்சி.....