அம்மா இ-கிராமம்


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டபேரவை விதி எண் 110 கீழ்அம்மாகிராமம்திட்டம்அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில்  முன்னோடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருகிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். 

இத்திட்டத்தின் நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு தொலைதொடர் மருத்துவம்தொலைதொடர் கல்விLED மின்விளக்குகள்WIFI-Hotspot,  திறன் மேம்பாடு சேவை, டிஜிட்டல் அறிவாற்றல் மையம்பொது சேவை மையம் போன்ற சேவைகளை கொண்டு சேர்ப்பதாகும். 

இத்திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் CSR நிதியின் மூலம் செயல்படுத்தபடவுள்ளது.  இது நாள் வரை ரூ. 1.62 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டம் 6 கிராமங்களில்  செயல்படுத்தப்படும்.


The Hon’ble Chief Minister had announced the scheme “Amma e-Gramam” on the floor of the Tamil Nadu Legislative Assembly under the rule 110. Government of Tamil Nadu (GoTN) has envisaged the Pilot of Amma e-Gramam by taking up a village in each district. It intends to provide a platform for availability of services such as tele-medicine, tele-education, LED lighting, WiFi hotspot, Skill Development, Digital knowledge centre and Common service centres to the rural citizens at the selected villages.
        This Project will be implemented through Corporate Social Responsibility funds of Government and private companies. Till date Rs.1.62 crore has been received. In Phase-I this scheme will be implemented in 6 villages.

Comments

  1. ஆம் ஆத்மி கட்சி - தமிழ்நாடு உறுப்பினர் G.M.Shankar M.A.B.L., வழக்குரைஞர், மடிப்பாக்கம், சென்னை-600091ல் வசிக்கும் நான் மேற்படி அம்மா -இ-கிராமம் என்கிற திட்டத்தினை வரவேற்கிறேன். கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் இணைய வசதிகள், மருத்துவ வசதிகள், தொலைதூரக்கல்வி, தொலைதூர மருத்துவம், திறன் வளர்ச்சி, டிஜிட்டல் அறிவு, பொது சேவை மையங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்த முனைவது நல்ல தொடக்கமே......... ஆனால் கிராமங்கள் அனைத்தும் விவசாயம் சார்ந்த பூமியாகும். நீரின்றி விவசாயம் இல்லை. மேற்படி வசதிகளால் , திட்டங்களால் விவசாயத்திற்கான நீரினை தடையின்றி பெற்றுத்தரமுடியுமென்றால் தாரளமாக தொடரலாம். ஆனால் விவசாயத்திற்கான நீர் ஆதாரத்தினை பெருக்க இயலாத, நீர் வசதியினை கொடுக்கமுடியாத எந்த டிஜிட்டல் திட்டமும், அறிவும் பயனற்றதே ஆகும். ஆகவே நீர் ஆதாரம் பெருக, விவசாயத்திற்கான பாசன வசதிக்கு நீர் கொண்டுவர, மண் வளத்தினை காப்பாற்ற மேற்படி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தினை போற்றவேண்டுமாய் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete

Post a Comment