மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் (SRDH)



மாநில குடியிருப்போர் தகவல்  தொகுப்பு மையமானது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் இருப்பிட விவரங்கள் அடங்கிய ஒரு தகவல் தொகுப்பு ஆகும். இத்தகவல் களஞ்சியமானது குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு துறைகளின் தரவுகளை ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, அரசால் திட்டங்களுக்கான இலக்கினை நிர்ணயம் செய்யவும், சிறந்த சேவைகளை வழங்கவும், திட்டங்களை கண்காணிக்கவும் இயலும்.  இத்திட்டத்திற்காக அரசானது ரூ.25.93 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

மாநில குடியிருப்போர்  தகவல்  மையத்தின் நோக்கங்கள்:
  • மாநில அளவிலான குடிமக்கள் தகவல்களை மின்னாக்கம் செய்து, மையப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் உருவாக்குதல் மற்றும்  நிர்வகித்தல்
  • ஆதார் எண்ணை தனித்த அடையாளமாக பயன்படுத்தி, குடிமக்களைக் கண்டறிதல். இதன் வாயிலாக சரியான பயனாளிகளை அடையாளம் காண இயலும்.
  • ஆதார் எண் இணைக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் அரசுத் துறைகளின் தரவுத் தளங்களை நிகழ்நிலையில் பயன்படுத்துதல்.
  • அனைத்து பயன்பாடுகளையும் ஆதார் எண் வாயிலாக சரிபார்த்தல்.
   ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்பட்டு, அவர்களின் உதவியோடு கணினி ஒருங்கிணைப்பாளர் கண்டறியப்பட்டு, அவர்களின் வாயிலாக இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு, பல்வேறு அரசுத் துறைகளிலிருந்து தகவல்கள் பெறப்பட்டு நகல்கள் நீக்கப்பட்டு, சிறந்த தரத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
            இதுவரை முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் (CMUPT) முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் (CMCHIS),    கருவூல இணையவழி ஓய்வூதியத் திட்டம் (Treasury e-Pension) மற்றும் நில பதிவேட்டு துறை போன்ற துறைகளின் தரவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன

State Resident Data Hub (SRDH) is a centralized data repository which contains demographic details of the residents of Tamil Nadu. The repository is built over a period of time with the integration of data from different Government Departments. It helps the Government in targeted, effective service delivery, greater accountability and more efficient monitoring of schemes. An amount of Rs. 25.93 crore has been sanctioned by the Government for implementing this project.
State Resident Data Hub (SRDH) helps the State to:
·   Create and manage complete State Level Resident Data in a digitized, centralized and secured manner.
·  Identify the targeted beneficiaries of different welfare schemes of  Government Departments by utilizing AADHAAR number as an unique   identifier of citizens.
·       Integrate AADHAAR enabled National Population Register (NPR) data with Departmental utility Databases on a real time basis.
·         Incorporate AADHAAR authentication into various applications.
So far, Chief Minister’s Uzhavar Pathukappu Thittam (CMUPT), Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS), Treasury e-Pension and Land records were seeded with SRDH Portal.

Comments

  1. வணக்கம். ஆம் ஆத்மி கட்சி - தமிழ்நாடு - உறுப்பினர், வழக்குரைஞர் G.M.Shankar , மடிப்பாக்கம், சென்னை-600091ல் வசிக்கும் நான் இந்த இணைய முகப்பில் கருத்துப் பதிவு செய்கிற முதல் நபர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் வாழ்கிற மக்களின் தகவல் பதிவேடு பராமரிப்பு என்பது நல்ல திட்டமாகும். பொதுவாக நகரமய வாழ்வில் நாட்டம் கொண்ட அதிகம் பேர் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து அவர்கள் நகரங்களிலும், அதனை சுற்றியுள்ள புறநகர்களிலும் குடிஅமர்ந்துள்ளார்கள். இவர்களின் தகவல் அவர்களது சொந்த ஊரிலும் இருக்கும், இடம் பெயர்ந்து குடிபுகுந்த இடங்களிலும் இருக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஆதார் கார்டு வழியாக இரண்டு இடங்களில் அவர்களுடைய முகவரியினை கொடுத்திருந்தால், அந்த தகவல் கொடுத்தவரிடம் ஒரு வாய்ப்பு கொடுத்து எது உங்களது நிரந்தர வாழ்விடம், எவ்விடத்தில் நீங்கள் தொடர்ந்து வசிப்பீர்கள் என்று விளக்கம் கேட்டுப்பெறவேண்டும். டிஜிட்டல் முறையில் தானியங்கி வழியில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அவர்களது இருப்பிடப் பதிவு இருந்தால் மாநில மக்களின் இருப்பிட பதிவு குறித்த தகவலில் இரட்டை பதிவுகள் இருக்காது. இல்லையெனில் வாக்காளர் பட்டியல்போல பல இரட்டை பதிவுகள் ஏற்பட்டுவிடும்.

    ReplyDelete

Post a Comment