குடிமக்களுக்கு சேவை தொடர்பான தகவல்களை அளிப்பதும், பெற்றிடுவதும் என இருவழி தகவல்
தொடர்பு வசதிகளாகும். அரசு
இ-சேவை மையங்களில் பயனாளர்கள் தங்களின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்தவுடன் குறுந்தகவல் மூலமாக விண்ணப்பம்
குறித்த தகவல் அனுப்பப்படும். பின்னர்,
விண்ணப்பத்தின் ஒப்புதல், நிராகரிப்பு அல்லது திருப்பி அனுப்புதல் போன்ற
தகவல்களும் குறுந்தகவல் மூலமாக பயனாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது. பயனாளர்கள் 155250 என்ற எண்ணிற்கு விண்ணப்ப எண்ணை அனுப்புவதன் மூலம்
அதன் தற்போதைய நிலையை உடனடியாக அறிந்து கொள்ளும் வசதியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவை மூலம் 20.05.2018 வரை 6.68 இலட்சப் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.
For providing
information and getting information from the people, two way communication
facility is introduced called as SMS based Service Tracking System. After
submitting the application at the e-Sevai centre’s the application number will
be sent to applicant immediately. After some days, the status of the
application such as approved/rejected/returned also informed to the applicant
through SMS. On 17/3/2017, Short Code facility
(155250) was introduced by Tamil Nadu e-Governance Agency (TNeGA) to the
Citizens in Tamil Nadu. By using short code, the applicant’s can know the
present status of the application. As on 20.05.2018, 6.68 lakh people have been
benefited by using Short Code facility.
ஆம் ஆத்மி கட்சி - தமிழ்நாடு உறுப்பினர் G.M. Shankar M.A.B.L., வழக்குரைஞர், மடிப்பாக்கம், சென்னை-600091ல் வசிக்கும் நான் மேற்படி சேவையைப்பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். ஆனால் இச்சேவை மூலம் 6.68 இலட்சம் பயனாளர்கள் பயனடைந்தும் ஒருவர் கூட இந்த இணைய முகப்பில் தங்களது கருத்துக்களை பதிவு செய்யாத காரணத்தினை ஆராயவேண்டும். பகிர்ந்தளிக்கப்பட்ட ஜனநாயகமே சிறந்தது ஆகும். யாருக்கு என்னென்ன கிடைக்கவேண்டுமோ அது அவர்களுக்கு நிச்சயம் அரசாங்க திட்டங்கள் மூலமாக சென்றடையவேண்டும். PMGDISHA என்கிற திட்டம் கிராமங்களில் கணிணி , மடிக்கணிணி, தொடு பலகை ஆகியவற்றின் பயன்பாடு அறியாதவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் அந்த நுண்ணறிவினை பயிற்றுவிக்கிற திட்டம். மேற்படி திட்டத்தினை தகவல் தொழில்நுட்பத்துறை சரியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்குமானால் இந்த இணைய முகப்பு பக்கத்தில் அதில் பயனடைந்த 26.79 இலட்சத்தில் ஒருவராவது தனது கருத்துகளை பதிவிட்டிருக்கக்கூடும். அவ்வளவு பேரும் அரசின் மீது அதிருப்தி கொள்ள வாய்ப்பில்லை. இப்படி ஒரு வசதி உள்ளது என்பதை துறை சார்ந்த அலுவலர்கள் விளம்பரப்படுத்தியிருக்கமாட்டார்கள்.
ReplyDeleteஇனிமேல் வானொலி, தொலைக்காட்சி, தினசரி நாளிதழ், பண்பலை வானொலி இவைகள் மூலம் விளம்பரம் செய்யுங்கள். அப்புறம் பாருங்கள் இந்த இணைய முகப்பு கருத்துகளால் குவிந்துவிடும். ஆகையால் இந்த இணைய முகப்பு பக்கம் மற்றும் திட்டங்களை மக்கள் பயன்படுத்திய பிறகு அவர்களிடம் அலைபேசி மூலமாக கருத்துக்களை கேட்டுப்பெறுவது நல்லது. உணவகத்திற்கு சாப்பிடச் செல்லும்போது உண்டுமுடித்தப்பிறகு சாப்பாட்டின் சுவை, தரம், உபசரிப்பு குறித்து கருத்துக்கேட்பதுபோல அரசாங்க திட்டங்களை செயல்படுத்தும்போதும் மக்களிடம் தயக்கமில்லாமல் கேட்கலாம். ஒரு மகிழ்ச்சியான தருணம் எதுவென்றால் மேற்படி கணிணி மற்றும் மிண்ணணு குறித்த திட்டங்களின் பெயர்களை தூய தமிழிலும் வெளியிட்டு அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்திருப்பது மொழி வளர்ச்சிக்கான நல்ல ஏற்பாடு. அதற்காக தமிழக அரசிற்கும், சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.