ஆதார் மூலமாக இணையவழியில் கோப்புகளில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட வழிவகை செய்கிறது. மின் கையொப்பமானது ஆதார் விவர சரிபார்ப்பு சேவை மூலம் இணையவழியில் மிக எளிதாக சரிபார்க்கப்படும். மின் கையொப்பமிடல் வசதியைப் பயன்படுத்த ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது ஆதார் எண்ணுடன் புலன்சார் அங்கீகாரக் கருவி கொண்டு பயன்படுத்தலாம். பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு வசதிகள், இதன் முக்கிய நன்மைகளாகும்.
மின் கையொப்பமிடல் வசதியினை வழங்குவதற்காக CDAC மற்றும் (n)code Solutions ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பத்திரப் பதிவுத் துறை, தொழிலாளர் நலத்துறை, சர்வ சிக்க்ஷா அபியான் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு மின் கையொப்பமிடல் வசதியினை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment