அரசு இ-சேவை மையங்கள்

இணைய வழியில் இ-சேவை மையங்களின் மூலமாக, தொலைதூர கிராமத்திலிருக்கும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது. தற்போதைய நிலையில்  அரசு இ-சேவை மையங்கள் மின் மாவட்டம் மற்றும் இதர பயன்பாட்டு சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன. கிராமப்புற பொது சேவை மையங்களின் பயன்களைக் கருத்திற்கொண்டு, இத்திட்டம் நகர்ப்புறப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் வெவ்வேறு அரசுத் துறைகளின் மின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில்,  நகர்ப்புறப் பகுதிகளில் ஒரு பொதுவான இடத்தில் வழங்கும் நோக்கில் நகர்ப்புற அரசு  இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), புது வாழ்வு திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்டுள்ள கிராமப் புற வறுமை ஒழிப்பு சங்கங்கள் (VPRC) மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), கிராமப் புற தொழில் முனைவோர் (VLE) மற்றும் வேளாண்மை அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனம் (IFAD) ஆகியவற்றின் மூலம் இ-சேவை மையங்கள் நடத்தப்படுகின்றன.
நகர்ப்புற அரசு இ-சேவை  மையங்களை அமைப்பதற்கான முதல் நிலை மாதிரி செயல் திட்டம் கடந்த  24-02-2014 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தத்தில் மாநில முழுவதும் 10,423 அரசு  இசேவை மையங்களில் 10,862 செயலிட முகப்புகள் இயங்கி வருகிறது. 

Government fulfil its vision to render all services at the doorstep of a commoner even at the remotest village through e-Sevai centres in electronic mode. As of now, the Arasu e-Sevai Centres are delivering e‑District services as well as other utility services to the citizen. Considering the usefulness of the Rural CSCs, the Scheme has been extended to urban areas.  Arasu e-Sevai Centres are functioning in urban areas with the objective of providing unified access to e-services of different Government Departments at a common point in the urban and semi-urban areas of the State.
 The Arasu e-Sevai centres are run by Service Centre Agencies like Primary Agricultural Co-operative Credit Societies (PACCS), Village Poverty Reduction Committee (VPRC) formed under Pudhu Vaazhvu Project, Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd (TACTV),  Village Level Entrepreneur (VLE) and International Fund for Agriculture Development (IFAD).
 The Pilot for the Urban Arasu e-Sevai Centres Scheme was launched in Chennai by the Honourable Chief Minister of Tamil Nadu on 24.02.2014
Currently there are 10,423 centres with 10,862 counters functioning across the State.